சென்னை : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு , அரசு உதவி பெறும் , தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வரும் ஜுன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய ஏப்ரல் 2017 பட்டயத் தேர்விற்கான, தேர்வு முடிவுகள் www.tndte.gov.in , http://intradote.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் அறியலாம்
www.tndte.gov.in , http://intradote.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பாதுகாப்பு கேள்விக்கு பதிலளித்தால் தேர்வு முடிவுகளை எளிதாக காணலாம்.
Source: tamil.samayam.com