புதுச்சேரி: ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகிற ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டகாக புதுச்சேரி கல்வித்துறை வாரியம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை தள்ளி வைக்குமாறு எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 7ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதமாவதால், வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுகின்றன.

Thanks: samayam.com