அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 9 மாணவர் கல்லூரி விடுதிகளும், 5 மாணவிகள் கல்லூரி விடுதிகளிலும் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளும், தங்கியிருந்து படிக்க பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இங்கு உணவு வசதியும், இருப்பிட வசதியும் வழங்கப்படும். ஆண்டு வருமானம் இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவ – மாணவிகள் விடுதிகளின் காப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தில் விண் ணப்பங்களைப் பெற்று, அங்கேயே சமர்ப் பித்துவிடலாம். பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை 044-25241002 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்கள் இல்லம் ஆதிதிராவிட சமூக சேவகர் சங்கத்தின் செயலாளர் ஏ.கோபிநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தண்டையார்பேட்டை மணிக் கூண்டு அருகே ரத்தினசபாபதி தெருவில் ஆதிதிராவிடர் மாணவர் இல்லம் உள்ளது. இங்கு 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதரவற்ற மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பப் படிவம் அந்த இல்லத்தில் வழங்கப்படுகிறது. இந்த மாணவர் இல்லத்தில் தங்கிப் படிக்க விரும்புவோர் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட அசல் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கடைசியாகப் படித்த கல்விச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச கணினி பயிற்சி மையமும் தொடங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks kalvisolai